சினிமா
பின்னணி பாடகர் வேல் முருகன் உணவு வழங்கிய காட்சி

1500 பேருக்கு உணவு வழங்கிய பின்னணி பாடகர் வேல்முருகன்

Published On 2020-05-11 15:11 IST   |   Update On 2020-05-11 15:11:00 IST
பின்னணி பாடகர் வேல்முருகன், அன்னையர் தினத்தை முன்னிட்டு1500 பேருக்கு உணவு வழங்கி இருக்கிறார்.
தமிழில் பின்னணி பாடகராக வலம் வருபவர் வேல்முருகன். பாடகராக ரசிகர்களை கவர்ந்த இவர் அன்னையர் தினத்தை முன்னிட்டு அயனாவரத்தில் இருக்கும் மக்கள் 1,500 பேருக்கு உணவு வழங்கி இருக்கிறார்.

இவருடன் டெப்டி செகரெட்டரி பிரகாஷ் IAS, ஐகோர்ட் செகரட்டரி மோகன், அடிஷனல் செகரிடி நாகப்பன் ஆகியோர் இணைந்து 1500 பேருக்கு உணவு கொடுத்திருக்கிறார்கள்.



அம்மா என்று சொல்லி பாருங்க... அந்த வார்த்தை கூட தெய்வமாகுங்க... கடவுளிடம் கேட்டு பாருங்க... தாயின் கருவறையே கோயில்தானங்க... என்ற பாடலையும் உருவாகி வெளியிட்டிருக்கிறார்.

Similar News