சினிமா
நடிகை ஸ்ரேயா

200 ரூபாய் அனுப்பினால் என்னுடன் ஆடலாம் - ஸ்ரேயா

Published On 2020-05-04 19:08 IST   |   Update On 2020-05-04 19:08:00 IST
200 ரூபாய் அனுப்பினால் என்னுடன் நடனம் ஆடலாம் என்று பிரபல நடிகை ஸ்ரேயா சரண் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஸ்ரேயா சரண், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டி வருகிறார். இதன்படி 200 ரூபாய் கூகுள் பிளே மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக அனுப்பினால், அவர்களில் இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தன்னுடன் நடனமாட வாய்ப்பு கிடைக்கும் என்று ஸ்ரேயா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.



கொரோனா வைரஸ் காரணமாக தினக்கூலி தொழிலாளர்கள் பசியும் பட்டினியுமாக இருப்பதால் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த அமைப்பிற்கு ரூபாய் 200 நிதி உதவி செய்துவிட்டு அதன் ஸ்க்ரீன் ஷாட்டை இ-மெயிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் இவ்வாறு அனுப்பியவர்களில் இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுடன் தான் நடனமாடுவது, யோகா செய்வது உள்ளிட்டவைகளை செய்ய இருப்பதாகவும் நடிகை ஸ்ரேயா சரண் அறிவித்துள்ளார்.

 இதனை அடுத்து ஸ்ரேயா குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்திற்கு ஏராளமானவர்கள் 200 ரூபாய் அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.

Similar News