சினிமா
ஓவியா

தன்னுடைய பிறந்தநாளுக்கு தானே கேக் செய்த ஓவியா

Published On 2020-04-29 22:27 IST   |   Update On 2020-04-29 22:27:00 IST
தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் ஓவியா தன்னுடைய பிறந்தநாளுக்கு தானே கேக் செய்து அசத்தி இருக்கிறார்.
மலையாளத்தில் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த ஓவியா 2010ல் களவாணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

அதன் பிறகு சிவகார்த்திகேயன் ஜோடியாக மெரினா, விமல் ஜோடியாக கலகலப்பு ஆகிய படங்களில் நடித்தார். கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். 

இன்றைய தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் ஓவியா, கடந்த வருடம் நண்பர் ஆரவ்வுடன் கொண்டாடினார். தற்போதைய கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் தனியாகவே பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார். மேலும் தன்னுடைய பிறந்த நாளுக்கு தானே கேக் செய்திருப்பதாக கூறியிருக்கிறார்.

Similar News