சினிமா
நடிகர் விஜய் சேதுபதி

அப்படி நான் சொல்லவே இல்லை... அது போலி - விஜய் சேதுபதி

Published On 2020-04-25 10:30 GMT   |   Update On 2020-04-25 10:30 GMT
அப்படி நான் சொல்லவே இல்லை... அது போலி என்று தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்
நடிகர் விஜய் சேதுபதி மதம் மாறிவிட்டார் என சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் பரவியது. அப்போது "போய் வேலை இருந்தா பாருங்கடா" என ட்விட் செய்து பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகை ஜோதிகா ஒரு விருது விழாவில் கோவில்கள் பற்றி பேசிய வீடியோ சர்ச்சையில் சிக்கி வருகிறது.  கோவிலுக்கு உண்டியலில் பணம் போடுவது போல மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கும் செலவு செய்யுங்கள் என கேட்டிருந்தார் ஜோதிகா.

ஜோதிகாவின் இந்த கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் பலரும் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். ஜோதிகாவுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி கருத்து தெரிவித்ததாக கூறி நேற்று முதல் ஒரு போலியான ட்விட் உலா வருகிறது.

"ஜோதிகா அவர்களின் துணிவான பேச்சுக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக இருப்பேன். கோவில்கள் மருத்துவமனையாக மாறும் காலம் நெருங்கிவிட்டது" என அதில் விஜய் சேதுபதி கூறியது போல குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ட்விட் முற்றிலும் போலியானது, அதை போட்டோஷாப் செய்து பரப்பியது யார் என்பது தெரியவில்லை என பிரபலங்கள் சிலர் விளக்கம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அது Fake என விஜய் சேதுபதி ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
Tags:    

Similar News