சினிமா
நடிகர் ராமராஜன்

மீண்டும் இயக்குனராக களமிறங்கும் ராமராஜன் - ஹீரோ யார் தெரியுமா?

Published On 2020-04-25 08:22 GMT   |   Update On 2020-04-25 08:22 GMT
80களில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக களமிறங்க இருக்கிறார்.
ராமராஜன் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர். சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து டைரக்டர் ராமநாராயணனிடம் உதவி டைரக்டராக வேலை செய்தார். ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ‘மருதாணி,’ ‘மறக்கமாட்டேன்,’ ‘ஹலோ யார் பேசுறது’ உள்பட பல படங்களை டைரக்டு செய்தார்.



 ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற படத்தின் மூலம் ராமராஜன் கதாநாயகன் ஆனார். முதல் படமே 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. அதன்பின் ‘கரகாட்டக்காரன்’ மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடி, படம் வெள்ளி விழா கண்டது. இதுவரை  44 படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் பூஜை போட்ட அன்றே வியாபாரம் ஆனது.

இந்த நிலையில்  பல வருட இடைவெளிக்குப்பின், ராமராஜன் மீண்டும் டைரக்டு செய்ய இருக்கிறார். இதற்காக இன்றைய முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய்சேதுபதியிடம் ஒரு கதை சொல்லி இருக்கிறார். ராமராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்க சம்மதித்து இருக்கிறார். இந்த படத்தில் ராமராஜன் நடிக்கவில்லை. டைரக்டு செய்வதோடு சரி. தொடர்ந்து அவர் இயக்குவதில் கவனம் செலுத்த முடிவு செய்து இருக்கிறார்.
Tags:    

Similar News