சினிமா
நடிகை கங்கனா ரணாவத்

கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார்

Published On 2020-04-25 07:27 GMT   |   Update On 2020-04-25 07:27 GMT
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் மீது போலீஸில் புகார் அளிக்கபட்டுள்ளது.
நடிகை கங்கனா ரணாவத்தின் சகோதரி ரங்கோலி, சில தினங்களுக்கு முன்பு மொராதாபாத்தில் கொரோனா வைரஸ் சோதனைக்காக சென்ற சுகாதார பணியாளர்கள் மீது கல்வீசி தாக்கிய சம்பவத்தை கண்டித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டார். இதனால் அவருக்கு கண்டனங்கள் எழுந்தன. ரீமா காக்கி என்ற பெண் இயக்குனர் ரங்கோலியை கைது செய்ய வேண்டும் என்றார். இந்த சர்ச்சையை தொடர்ந்து டுவிட்டர் நிர்வாகம் ரங்கோலியின் கணக்கை முடக்கியது.

இதனால் ஆத்திரமடைந்த கங்கனா ரணாவத் சகோதரிக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “எனது சகோதரி மருத்துவர்களையும், காவல் துறையினரையும் தாக்கியவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்றுதான் கூறினார். எந்த சமூகத்துக்கும் எதிராக அவர் கருத்து சொல்லவில்லை” என்றார்.

 சகோதரிக்கு ஆதரவாக பேசிய கங்கனா ரணாவத் மீது மும்பையை சேர்ந்த அலி காசிப்கான் தேஷ்முக் என்ற வழக்கறிஞர் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், “இனப்படுகொலை குறித்து சர்ச்சையாக பேசிய தனது சகோதரிக்கு கங்கனா ரணாவத் ஆதரவு தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட மதத்தினரை பற்றியும் அவதூறாக பேசி இருக்கிறார். தனது புகழ், ரசிகர்கள், பணம் ஆகியற்றை நாட்டில் வெறுப்பை தூண்டவும், நாட்டில் பிளவை ஏற்படுத்தவும், சொந்த ஆதாயத்துக்காகவும் பயன்படுத்தும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News