சினிமா
சின்னி ஜெயந்த்

ஊரடங்கு நாட்களில் 3 படத்துக்கு கதை ரெடி பண்ணிட்டேன் - சின்னி ஜெயந்த்

Published On 2020-04-23 02:11 GMT   |   Update On 2020-04-23 02:11 GMT
கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நாட்களில் 3 படங்களுக்கு கதை தயார் செய்துவிட்டதாக சின்னி ஜெயந்த் கூறியுள்ளார்.
‘கொரோனா’ வைரஸ் பரவுவதன் காரணமாக அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து நடிகர்-நடிகைகள் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்கள். இந்த ஓய்வு நாட்களை ஒவ்வொரு நடிகர்-நடிகையும் பயனுள்ள வழிகளில் கழிக்கிறார்கள். நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் ஓய்வு நேரத்தில் என்ன செய்தார்? என்பதை இங்கே கூறுகிறார்.

“இந்த நாட்களில், 3 படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதை எழுதினேன். ‘வெற்றிப்பாதை’ என்ற புத்தகத்தை எழுதினேன். வீட்டின் அருகில் உள்ள ஏழைகளுக்கு உணவு வழங்கினேன். சிலருக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக கூறினார்கள். அவர்களுக்கு நகைச்சுவையாக பேசி, நடித்துக் காட்டினேன். தியானம் செய்யும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.

எம்.ஜி.ஆரின் பொன்னான மந்திர வார்த்தைகளான “ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே” என்ற வார்த்தைகளை அடிக்கடி சொல்லுங்கள், ஒரு ‘பவர்’ கிடைக்கும் என்று கூறினேன். தற்போது நான் 4 புதிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறேன். அந்த படங்கள் ஒவ்வொன்றாக திரைக்கு வரும்”. இவ்வாறு சின்னி ஜெயந்த் கூறினார்.
Tags:    

Similar News