சினிமா
ரைசா

அவரைத்தான் கல்யாணம் பண்ண போறேன், அவர்கிட்ட சொல்லாதீங்க - ரைசா

Published On 2020-04-15 21:31 IST   |   Update On 2020-04-15 21:31:00 IST
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா, அவரைத்தான் கல்யாணம் பண்ண போறேன், அவர்கிட்ட சொல்லாதீங்க என்று பதிலளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ரைசா. இதன்பிறகு ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

எப்போதும் ரசிகர்களின் கேள்விக்கு ஜாலியாக பதிலளிக்கக் கூடியவர் ரைசா. அந்தவகையில் ரசிகர் ஒருவர், 'ஹரீஷ் அண்ணாவும் நீங்களும் கல்யாணம் பண்ணிப்பீங்களா?' எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ரைசா, “ஆமாம். நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். ஆனால் இதை அவரிடம் சொல்லி விடாதீர்கள். அவருக்கு இது சர்ப்பிரைஸ்” என வேடிக்கையாக பதிலளித்துள்ளார்.

Similar News