சினிமா
இயக்குனர் மணிரத்னம்

அந்த இயக்குனரின் தீவிர ரசிகன் நான் - மணிரத்னம்

Published On 2020-04-15 20:14 IST   |   Update On 2020-04-15 20:14:00 IST
அந்த இயக்குனரின் தீவிர ரசிகன் நான் என்று மணிரத்னம், ரசிகர்களுடன் பேசும் போது அவர் கூறியுள்ளார்.
பல வெற்றி படங்களை இயக்கியவர் மணிரத்னம். இவர் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு இல்லாததால் மணிரத்னம் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாற்றினார்.

 இவருடன் பேசுவதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்கள் சிலரும் ஆன்லைனில் வரிசை கட்டி நின்றார்கள்.



அப்போது பிரபல இளம் மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் இவர்கள் உரையாடலை கவனித்துள்ளார். அவர் இருப்பதை கவனித்த சுஹாசினி, லிஜோவை வரவேற்று தானும் தனது கணவரும் அவரது படங்களுக்கு தீவிர ரசிகர்கள் என கூறினார்.

 லிஜோவுடன் தொடர்ந்து உரையாடிய மணிரத்னம், அவர் இயக்கிய அனைத்து படங்களையும் தான் பார்த்துவிட்டதாக கூறி, மலையாள திரையுலகில் உள்ள மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான லிஜோ தொடர்ந்து இதேபோன்ற நல்ல படைப்புகளை தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ், ஈ மா யூ, ஜல்லிக்கட்டு என சிறந்த  படங்களை தந்து ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களையும் கவர்ந்தவர் தான் இயக்குனர் லிஜோ ஜோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News