சினிமா
தனுஷ், சிம்பு

எல்லாம் போலியானவை - சிம்பு, தனுஷ் பட நடிகையின் வருத்தம்

Published On 2020-04-15 16:33 IST   |   Update On 2020-04-15 16:33:00 IST
எல்லாம் போலியானவை என்று தனுஷ், மற்றும் சிம்பு படத்தில் நடித்த நடிகை வருத்தமாக கூறியிருக்கிறார்.
தமிழில் தனுஷ் ஜோடியாக ‘மயக்கம் என்ன’ படத்தில் அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். தொடர்ந்து சிம்புவுடன் ‘ஒஸ்தி’ படத்தில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் அமெரிக்கா சென்று எம்.பி.ஏ. படித்தார். கல்லூரியில் தன்னுடன் படித்த ஜோ லாங்கெல்லா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.



இந்தநிலையில் இன்ஸ்டாகிராமில் ரிச்சா பெயரில் சில பக்கங்கள் இருந்தன. அவற்றில் ரிச்சாவின் புகைப்படங்கள் மற்றும் அவரை பற்றிய தகவல்கள் பகிரப்பட்டு வந்தன. அவை ரிச்சாவின் உண்மையான பக்கங்கள் என்று கருதி ரசிகர்களும் பின் தொடர்ந்து கருத்துகள் பதிவிட்டு வந்தார்கள். தன் பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் கணக்குகள் போலியானவை என்று நடிகை ரிச்சா கூறியுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

“எனக்கு ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு உள்ளது. இப்போதுதான் இந்த இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி இருக்கிறேன். இதில் 6 பதிவுகள் மட்டுமே வெளியிட்டு உள்ளேன். எனது பெயரில் உள்ள இதர இன்ஸ்டாகிராம் பக்கங்கள் அனைத்தும் போலியானவை. அவற்றில் என்னை பற்றிய தகவல்களை உண்மைபோல் சித்தரித்து வெளியிடுகின்றனர். அந்த கணக்குகள் உண்மையானவை அல்ல”. இவ்வாறு ரிச்சா கூறியுள்ளார்.

Similar News