சினிமா
கணவருடன் ரம்பா

குழந்தைகளின் வாழ்த்து மழையில் நனைந்த ரம்பா

Published On 2020-04-13 19:13 IST   |   Update On 2020-04-13 19:13:00 IST
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா, குழந்தைகளின் வாழ்த்து மழையில் நனைந்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. கடந்த 2010ம் ஆண்டு கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிப்பிற்கு முழுக்கு போட்ட ரம்பா, டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்றார். இவர்களுக்கு லான்யா, சாஷா மற்றும் ஷிவின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.



கொரோனா ஊரடங்கால் உலகமே முடங்கி உள்ள நிலையில் கனடாவில் வசிக்கும் ரம்பா திருமண நாளை வீட்டிலேயே கொண்டாடினார். இதுகுறித்து அவர் கூறும்போது, நண்பர்கள், உறவினர்கள் இல்லாமல் கணவர், குழந்தைகளுடன் திருமண நாளை கொண்டாடினோம். வெளியில் இருந்து கேக் கூட வாங்காமல் நாங்களே வீட்டில் கேக் தயார் செய்தோம்.



 எதிர்பாராத நேரத்தில் இரு மகள்கள் கொடுத்த வாழ்த்துமடல் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. இந்த கடினமான சூழலில் பணம், பரிசுகள் எதுவும் இன்றி அன்பு மட்டுமே எங்களை மகிழ்ச்சி கொள்ள செய்தது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்' என்றார்.

Similar News