சினிமா
விஷ்ணு விஷால்

புதிய படத்தின் தலைப்பை அறிவித்தார் விஷ்ணு விஷால்

Published On 2020-04-11 16:52 IST   |   Update On 2020-04-11 16:52:00 IST
பல வெற்றி திரைப்படங்களில் நடித்த விஷ்ணு விஷால் தான் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்திருக்கிறார்.
விஷ்ணு விஷால் தற்போது எப்.ஐ.ஆர் படத்தில் நடித்து வருகிறார். அவரது அடுத்தப் பட வேலையை ஏப்ரல் 11ல் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அது நடக்காமல் போய்விட்டது.

இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், என்னுடைய புதிய படத்தை ஏப்ரல் 11 அன்று தொடங்குவதாக இருந்தேன். ஆனால் வாழ்க்கை வேறு திட்டங்களை வைத்திருக்கிறது.

புதிய படத்தின் தலைப்பு மற்றும் டீசரை வெளியிட வித்தியாசமான முயற்சி ஒன்றை செய்திருக்கிறோம் என்று கூறியிருந்தார்.  தற்போது, மோகன் தாஸ் என்று தலைப்பு வைத்து புதிய படத்தின் முன்னோட்டத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

Similar News