சினிமா
நடிகர் கரண்

11 ஆண்டுகள் கழித்து டிரெண்டாகும் கரண் பட பாடல்

Published On 2020-04-11 13:53 IST   |   Update On 2020-04-11 13:53:00 IST
11 ஆண்டுகளுக்கு முன்பு கரண் நடிப்பில் வெளியான திரைப்படத்தின் பாடல் தற்போது டிரெண்டாகி வருகிறது.
2009 -ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி, நடிகர் கரண், ஷம்மு, உதயதாரா, சக்திக்குமார், கஞ்சா கருப்பு, சரத் பாபு ஆகியோர் நடித்த படம் மலையன்.

இப்படத்தின் கதை சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி பற்றியது, இத்திரைப்படம்  2009 ஆம் ஆண்டு தமிழக அரசின்  மூன்று விருதுகளை வாங்கியது.

இப்படம் வெளிவந்து 11 வருடங்கள் ஆகின்றன. இப்படத்திற்காக தீனா  இசையில், சினேகன்  எழுதிய  "பொத்தி வெச்ச ஆசை எல்லாம் பத்திரமா இருக்குது ஐயா" என்ற பாடல்  தற்போது Tik - Tok ல் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

கொரோனா பாதிப்பில் நாடு திரும்ப முடியமால் வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய கணவனை நினைத்து உருகி தாலியை கையில் பிடித்து கொண்டு பெண்கள் டிக் டாக் செய்கிறார்கள்.

இது பார்ப்பவர் மனதை நெகிழ வைக்கிறது. 11 வருடங்கள் ஆனாலும் இந்தப்பாடல் நவீன டிக் டாக் காலத்திலும் ட்ரெண்டிங் ஆகி வருவதை எண்ணி படக்குழு மகிழ்ச்சி அடைகிறார்கள்.

Similar News