சினிமா
சஞ்சனா சிங்

வித்தியாசமான சவால் விட்ட சஞ்சனா சிங்

Published On 2020-04-11 12:46 IST   |   Update On 2020-04-11 12:47:00 IST
தமிழில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சஞ்சனா சிங், சமூக வலைத்தளத்தில் வித்தியாசமான சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை, அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

முடிந்தவரை தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்தும்  பிரபலங்கள் பொழுதை போக்கி வருவதோடு, தங்கள் செய்த விஷயங்களை புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தி வருகிறார்கள்.

தற்போது கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங்,  உள்ளாடையோடு... தலைகீழாய் நின்றபடி உடை போடும் சேலஞ்சு செய்து இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News