சினிமா
பர்மா அகதிகளுக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் உதவிய காட்சி.

பர்மா அகதிகளுக்கு உதவிய பி.டி.செல்வகுமார்

Published On 2020-04-10 16:50 GMT   |   Update On 2020-04-10 16:50 GMT
பர்மா அகதிகளுக்கு கலப்பை மக்கள் இயக்க தலைவரும், தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் உதவி செய்திருக்கிறார்.
கொரோனா அச்சத்தால் வீட்டில் முடக்கியிருக்கும் ஏழை மக்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் தொடர்ந்து  உதவி கரம் நீட்டி வருகிறது. கஜா புயலால் பாதிக்கபட்ட நபர்களுக்கு முதன் முதலில் இரண்டரை லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள்  T.ராஜேந்தர் தலைமையில் அனுப்பியதுடன் பட்டு கோட்டையில்  நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் முன்னிலையில் 100 பசுங்கன்றுகள் வழங்கப்பட்டது.

இப்போது கடந்த 4 நாட்களாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட கேளம்பாக்கம், துரைப்பாக்கம் சுற்றி வசிக்கின்ற வட மாநில தொழிலாளர்கள், இருளர் இனத்தவர்கள், ஆந்திரா கட்டிட தொழிலாளர்கள் மற்றும் பர்மா அகதிகள் என அனைவருக்கும் சுமார் 250 மூட்டைகள் அரிசி, மளிகை பொருட்கள், காய் கறிகள் மற்றும் முககவசங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்வில் கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் கலப்பை மாநில ஒருங்கிணைப்பாளர் வி.கே.வெங்கடேசன், கிராம அதிகாரி பொன்னுதுரை, சமூகஆர்வலர் வேந்தரசி மற்றும் பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News