சினிமா
ராகவா லாரன்ஸ்

ஷங்கர், ஏ.ஆர்.முருகதாசை விட அதிக சம்பளம் வாங்கும் லாரன்ஸ்

Published On 2020-04-10 06:33 GMT   |   Update On 2020-04-10 06:33 GMT
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாசை விட அதிகம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய திரையுலகில் டைரக்டர் மணிரத்னம் பெரும்பாலும் சொந்த படங்களையே இயக்கி வருகிறார். அதனால் அவருடைய சம்பளம் இவ்வளவு என்று நிர்ணயிக்கப்படவில்லை. அவர் இப்போது ரூ.1,000 கோடி செலவில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தை உருவாக்கி வருகிறார். அதில், பிரபல கதாநாயகர்கள் பலர் இணைந்து நடிக்கிறார்கள். மணிரத்னத்தை தவிர்த்து, தென்னிந்திய டைரக்டர்களிலேயே அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையை பெற்றவர், ஷங்கர். 

இவர் ஒரு படத்துக்கு ரூ.20 கோடி வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்த இடத்தில் இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்து சில வெற்றி படங்களை கொடுத்து, ‘மார்க்கெட்’ அந்தஸ்தை உயர்த்திக் கொண்டார். அதைத்தொடர்ந்து இவரும் ஒரு படத்துக்கு ரூ.20 கோடி சம்பளம் பெறுவதாக பேசப்படுகிறது. தற்போது ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரையும் சம்பள விஷயத்தில், ராகவா லாரன்ஸ் முந்தி விட்டார். 



இவர் நடித்து இயக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘காஞ்சனா’ (தமிழ்) படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். அதில் கதாநாயகனாக அக்‌ஷய்குமார் நடிக்கிறார். இவருக்கு இந்த படத்துக்கான சம்பளம் ரூ.120 கோடி. டைரக்டர் ராகவா லாரன்சுக்கு சம்பளம் ரூ.50 கோடி என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் இருவரையும் சம்பள விஷயத்தில், ராகவா லாரன்ஸ் முந்தி விட்டார்.
Tags:    

Similar News