ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா இருவரும் ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து கொரோனா நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்களுக்கு உதவ நடிகர்-நடிகைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நிதி திரட்டி வருகின்றன. உணவு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வருகின்றன.
இந்த நிலையில் ஹாலிவுட் நடிகர்கள் ‘ஒன் வேல்டு’ என்ற பெயரில் தொலைக்காட்சியில் நேரடி நிகழ்ச்சியை நடத்தி கொரோனா நிதி திரட்ட இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இந்தி நடிகர் ஷாருக்கான், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். பிரபல அமெரிக்க பாடகி லேடி காகா தொகுத்து வழங்குகிறார்.
இதன் மூலம் வசூலாகும் தொகையை உலக சுகாதார நிறுவனத்துக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் வழங்க இருக்கிறார்கள். ஏற்கனவே ஷாருக்கான் பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு தனது பட நிறுவனம் சார்பில் நிதி வழங்கி இருக்கிறார்.