சினிமா
மலையாள நடிகர் மோகன்லால்

ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கிய மோகன்லால்

Published On 2020-04-09 10:16 GMT   |   Update On 2020-04-09 10:16 GMT
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் நிதி திரட்டி வருகின்றன. இதுபோல் சினிமா படப்பிடிப்புகள் நின்று போனதால் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவி வழங்க, சினிமா சங்கங்கள் நிதி திரட்டுகின்றன. இதற்கு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள நடிகர்கள் பலரும் நிதி வழங்கி வருகிறார்கள்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், சூர்யா, விஜய்சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் பலர் திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சிக்கு நிதி வழங்கி உள்ளனர். இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஆகியோர் பிரதமர் நிவாரண நிதி வழங்கினார்கள். சிரஞ்சீவி, பவன்கல்யாண், ராம்ரசரண் உள்ளிட்ட முன்னணி தெலுங்கு நடிகர்களும் நிதி வழங்கி இருக்கிறார்கள்.

இதுபோல் மலையாள நடிகர் மோகன்லால் தற்போது கேரள முதல்-அமைச்சரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்கி இருக்கிறார்.
Tags:    

Similar News