சினிமா
சேதுராமன், உதயநிதி

சேதுராமனின் மரணம் என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது - உதயநிதி

Published On 2020-03-27 21:39 IST   |   Update On 2020-03-27 21:39:00 IST
மாரடைப்பால் காலமான சேதுராமனின் மரணம் என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர் சேதுராமன். இவர் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.  

இவரது மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின், 'சேதுராமன் நல்ல மனிதர், நல்ல நண்பர், சிறந்த மருத்துவர், திரைப்பட நடிகர். அவரின் அகால மரணம் என்னைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சேதுவை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கும், அவரின் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

Similar News