கொரோனா பீதியால் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனாவால் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ரத்து
பதிவு: மார்ச் 15, 2020 14:43
மணிரத்னம்
‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, சென்னை, பாண்டிச்சேரி, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்து வந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பை புனேவில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பீதியால் அங்கு நடைபெற இருந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :