சினிமா
கோப்ரா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

ரசிகர்களை மிரள வைத்த கோப்ரா பர்ஸ்ட் லுக்

Published On 2020-02-28 14:28 GMT   |   Update On 2020-02-28 14:28 GMT
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறது.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, தற்போது விக்ரமை வைத்து ’கோப்ரா’  என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.



கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த போஸ்டரில் விக்ரமின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Tags:    

Similar News