ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங் நடித்துள்ள ஜிப்ஸி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
ஜிப்ஸி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பதிவு: பிப்ரவரி 24, 2020 09:33
ஜீவா, நடாஷா சிங்
குக்கூ, ஜோக்கர் படங்களை எடுத்து பிரபலமான ராஜூ முருகன் தற்போது இயக்கி இருக்கும் படம் ‘ஜிப்ஸி’. ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார். மேலும் சன்னி வைய்யன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ரம் சிங், கருணா பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் இழுபறி நீடித்ததால் இப்படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற மார்ச் 6-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :