சினிமா
கேத்தரின் தெரசா

ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தும் நடிக்க மறுத்த கேத்தரின் தெரசா

Published On 2020-02-16 16:52 IST   |   Update On 2020-02-16 16:52:00 IST
நடிகை கேத்தரின் தெரசா, ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தும் பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
கேத்தரின் தெரசா தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக வேர்ல்டு பேமஸ் லவ்வர் படத்தில் நடித்து இருக்கிறார். முன்னதாக சீனியர் தெலுங்கு நடிகர் என்.டி. பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்ரின் நடிப்பதாக தகவல் வெளியானது. இதற்காக அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் தரப்படுவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அப்படத்தில் கேத்ரின் நடிக்க மறுத்துவிட்டதாக பின்னர் தகவல் வெளியானது. ஆனால் இதுபற்றி யாரும் உறுதிபடுத்தவில்லை. 

இந்நிலையில் கேத்ரின் தெரசா தனது புதிய பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அவரிடமே அதற்கான பதிலை பெற விரும்பிய நிருபர்கள் என்.டி.பாலகிருஷ்ணா படத்தில் நடிக்கிறீர்களா என்றனர். அதைக்கேட்டு கோபம் அடைந்த கேத்தரின்,'என்னைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல நான் சரியான நபர் கிடையாது. 



அதுபற்றி சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் அல்லது தயாரிப்பாளர் ரவீந்தர் ரெட்டி அல்லது இயக்குனரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். இதுதொடர்பாக எந்த பதிலும் நான் சொல்ல மாட்டேன் என ஏற்கெனவே தெளிவாக கூறியிருக்கிறேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார்.

Similar News