நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ்குமார் 5 ஆண்டுகளுக்கு பின் பிரபல நடிகரின் படத்துக்கு இசையமைக்க உள்ளார்.
5 ஆண்டுகளுக்கு பின் பிரபல நடிகரின் படத்திற்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ்
பதிவு: பிப்ரவரி 06, 2020 16:45
ஜிவி பிரகாஷ்குமார்
நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு வெளியான கைதி, தம்பி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த கைதி படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து, இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே கார்த்தி நடித்த கொம்பன், சகுனி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கார்த்தி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :