சினிமா
அக்‌ஷய் குமார்

என் தேசபக்தியை சந்தேகிப்பதா? - அக்‌ஷய்குமார் வருத்தம்

Published On 2019-12-09 08:21 GMT   |   Update On 2019-12-09 08:21 GMT
பிரபல பாலிவுட் நடிகரும், 2.0 படத்தில் வில்லனாக நடித்தவருமான அக்‌ஷய்குமார், என் தேசபக்தியை சந்தேகிப்பதாக கூறி வருத்தமடைந்துள்ளார்.
ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை. கனடா குடியுரிமை வைத்துள்ளதால் அவர் ஓட்டுபோடவில்லை என்று சமூக வலைத்தளத்தில் விமர்சனங்கள் கிளம்பின. இதுகுறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் அக்‌ஷய்குமார் விளக்கம் அளித்து கூறியதாவது:-

“என்னிடம் கனடா பாஸ்போர்ட் இருப்பதை மறைக்கவில்லை. ஆனாலும் 7 வருடங்களாக அந்த நாட்டுக்கு சென்றது இல்லை. நான் நடித்த 14 படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்தன. இனிமேல் படங்களில் வாய்ப்புகள் கிடைக்காது என்று நினைத்தேன். அப்போது கனடாவில் இருக்கும் நண்பர் ஒருவர் சேர்ந்து வேலை செய்யலாம் என்று அந்த நாட்டுக்கு அழைத்தார். அதனால்தான் கனடா பாஸ்போர்ட் வாங்கும் முயற்சியில் இறங்கினேன். ஆனால் எனது 15-வது படம் வெற்றி பெற்றதும் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தேன். எனது பாஸ்போர்ட்டை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை. என் தேசபக்தியை சந்தேகிக்கின்றனர். நான் இந்தியன் என்பதை நிரூபிக்க இந்திய பாஸ்போர்ட்டை காட்ட வேண்டும் என்று சொல்வது வருத்தமாக உள்ளது.



இப்போது இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து இருக்கிறேன். அது விரைவில் கிடைத்து விடும். நான் இந்தியன். எனது மனைவி, மகன் இந்தியர்கள். அவர்களுக்கு கனடா குடியுரிமை வாங்கவில்லை. நான் இந்தியாவில் வாழ்கிறேன். இங்குதான் வரி கட்டுகிறேன்”

இவ்வாறு அக்‌ஷய்குமார் கூறினார்.
Tags:    

Similar News