சினிமா
தனுஷ், மேகா ஆகாஷ்

ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷின் 2 படங்கள்

Published On 2019-11-26 08:37 IST   |   Update On 2019-11-26 08:37:00 IST
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ், இவர் நடித்துள்ள 2 படங்கள் வருகிற நவம்பர் 29-ந் தேதி ரிலீசாக உள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. 



2 வருடத்திற்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தாலும், பண நெருக்கடி, கோர்ட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் திட்டமிட்டபடி வெளியாகாமால் தள்ளிப்போனது. தற்போது பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு இப்படம் வருகிற 29-ந் தேதி ரிலீசாக உள்ளது. அதே தினத்தில் தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான பக்கிரி, சீனாவில் வெளியாக உள்ளது. சுமார் 13 ஆயிரம் திரையரங்குகளில் இப்படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News