சினிமா
ரவீனா தண்டன்

44 வயதில் பாட்டியான கமல் பட நடிகை

Published On 2019-09-19 18:44 IST   |   Update On 2019-09-19 18:44:00 IST
தமிழில் கமலின் ஆளவந்தான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த நடிகை ஒருவர் 44 வயதில் பாட்டியாகி உள்ளார்.
இந்தி சினிமாவில் கதா நாயகியாக இருந்தவர் ரவீனா தண்டன். தமிழில் கமலின் ஆளவந்தான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். இவருக்கு வயது (44). ரவீனாவின் கணவர் பெயர் அனில் தண்டரி. ரவீணா 21வது வயதில் 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க தொடங்கினார். மூத்த பெண்ணான சாயாவுக்கு 2016-ம் ஆண்டு திருமணம் நடத்தி வைத்தனர். 

சாயாவுக்கு சில தினங்களுக்கு முன் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் மூலம் ரவீனா பாட்டி ஆனார். ரவீனா 44 வயதிலேயே பாட்டியாகியுள்ள செய்தி பாலிவுட்டில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சின்ன குழந்தையை வரவேற்பதற்காக குடும்பத்தின் சார்பில் பல்வேறு விதமான பூஜைகள் நடத்தப்பட்டன.



அந்த பூஜையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ரவீணா சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குழந்தைகளின் ஊட்டச்சத்து நிபுணரான பூஜா என்பவர் இன்ஸ்டா கிராமில், “பலரும் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி பாசத்தை பகிர வேண்டும் என்று கூறுவர். ஆனால் நீங்கள் மட்டுமே அதனை உங்களுடைய நிஜ வாழ்க்கையில் அமல் படுத்தியுள்ளீர்கள்” என்று ரவீனாவை புகழ்ந்து பதிவு செய்திருந்தார்‌.

Similar News