சினிமா

படப்பிடிப்பில் 16-வது ஆண்டை கொண்டாடிய ஜெயம் ரவி

Published On 2019-06-21 15:54 IST   |   Update On 2019-06-21 15:54:00 IST
லக்‌ஷ்மன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் தனது 16வது ஆண்டை கேக் வெட்டி நடிகர் ஜெயம் ரவி கொண்டாடி இருக்கிறார்.
ஜெயம் ரவி அடுத்ததாக லக்‌‌ஷ்மன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இது ஜெயம் ரவியின் 25-வது படமாக உருவாகிறது. இதில் லக்‌‌ஷ்மனும் ஜெயம் ரவியும் ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் படங்களுக்கு பின் மூன்றாவது முறையாக இணைகிறார்கள்.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நித்தி அகர்வால் நடிக்கிறார். தம்பி ராமையா, ராதாரவி, சதீஷ், சரண்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டட்லி ஒளிப்பதிவு செய்கிறார்.



இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஜெயம் ரவி சினிமாவுக்கு வந்து 16 ஆண்டுகள் ஆன நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

Similar News