சினிமா

ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பரிசுப்பொருட்கள், உணவு வழங்கிய விஜய்

Published On 2019-05-26 12:45 IST   |   Update On 2019-05-26 12:39:00 IST
நடிகர் விஜய் மே தினத்தனத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டும் தொழிலார்களுக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் மதிய உணவு வழங்கியுள்ளார்.
ஆண்டு தோறும் உழைப்பாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு, நடிகர் விஜய் தொழிலாளர் தோழர்களுக்கு தனது சொந்த செலவில்  விருந்தளித்து பரிசு பொருட்கள் தருவது வழக்கம். 

இவ்வாண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டமையால், இவ்வாண்டுக்கான விழா, இன்று தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் மே தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. 



விஜய் படப்பிடிப்பில் உள்ளதால், அவரது உத்தரவின் பேரில் விழாவினை மாநில பொறுப்பாளர் புஸ்ஸி என் ஆனந்த் தலைமையேற்று  ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பரிசுகள் மற்றும் மதிய உணவை வழங்கினார்.
Tags:    

Similar News