சினிமா

என்ஜிகே படப்பிடிப்பு எனக்கு ஸ்கூல் மாதிரி இருந்தது - சாய் பல்லவி

Published On 2019-04-29 20:35 IST   |   Update On 2019-04-29 20:35:00 IST
என்ஜிகே படப்பிடிப்பு எனக்கு ஸ்கூல் மாதிரி இருந்தது என்று நடிகை சாய் பல்லவி டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். #NGK #SaiPallavi
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் சாய் பல்லவி பேசும்போது, ‘கதை கேட்டவுடன் எனக்கு பிடித்தது. படப்பிடிப்பு எனக்கு ஸ்கூல் மாதிரி இருந்தது. லீவு கிடைக்காதா?, மழை பெய்யாதா? என்று ஸ்கூல் மாணவன் போல் நினைத்துக் கொண்டு இருந்தேன். படப்பிடிப்பு தளம் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. நான் வீட்டில் இருந்து செல்லும் போதே இப்படி நடிக்கனும், அப்படி நடிக்கனும் என்று தயாராக செல்வேன். ஆனால், அங்கு சென்றால் வேற மாதிரி இருக்கும். நான் தயாராக செல்வதுதான் தவறு என்று புரிந்துக் கொண்டேன். 



இயக்குனர் செல்வராகவனிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். என்னை விட சிறப்பாக நடிக்கிறார். சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை நான். அவர் கூட இருந்து எப்படி பட்டவர் என்று தெரிந்துக் கொண்டேன்’ என்றார்.
Tags:    

Similar News