சினிமா

பாம்பை கண்டு அதிர்ச்சியான சிபிராஜ்

Published On 2019-04-27 16:05 IST   |   Update On 2019-04-27 16:05:00 IST
தமிழில் குறிப்பிட்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் சிபிராஜ், பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். #SibiRaj
நடிகர் சிபிராஜ் கவனமாக தனது படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவருக்கு நேர்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் பற்றி பகிர்ந்துள்ளார். இதுபற்றி அவர் கூறியது:- சில தினங்களுக்கு முன் உடுமலைக்கு உறவினர் இல்லத்துக்கு சென்றேன்.

அங்கு வந்த இளைஞர்கள் புகைப்படம் எடுத்தபோது காலுக்கடியில் உஷ் உஷ் என்று சத்தம் கேட்டது. கேமிரா பிளாஷ் ஒளியில் பார்த்த போது என் கால் அருகே பெரிய பாம்பு தனது இரவு நேர சாப்பாட்டுக்காக தவளையை வேட்டையாட மும்முரமாக இருந்தது.



கவனிக்காமல் அதன் அருகே சென்றுவிட்டதால் அதிர்ச்சியில் ஒரு நொடி நிலைகுலைந்து போனேன். இப்படி ஒரு காட்சியை நான் எண்ணிக்கூட பார்க்கவில்லை. அப்போதுதான் வாழ்க்கையே நிலையில்லாதது என்ற எண்ணம் என் சிந்தனையில் மின்னலாக தோன்றி மறைந்தது’ என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News