சினிமா

ஜெயம் ரவியின் 25-வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published On 2019-04-19 02:52 GMT   |   Update On 2019-04-19 02:52 GMT
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவியின் 25-வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #JayamRavi
‘ஜெயம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஜெயம் ரவி, இதுவரை 24 படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடித்த ‘அடங்க மறு’ படம், அவருடைய 24-வது படமாக கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் 25-வது படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

இவருடைய 25-வது படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. லட்சுமன் டைரக்டு செய்கிறார். இவர், ஜெயம் ரவியை வைத்து ஏற்கனவே ‘போகன்,’ ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய 2 படங்களை டைரக்டு செய்து இருக்கிறார். மூன்றாவது முறையாக இருவரும் புதிய படத்தில் இணைந்து பணிபுரிய இருக்கிறார்கள். இதுபற்றி டைரக்டர் லட்சுமன் கூறியதாவது:-

‘‘ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளத்தக்க கதைக்களத்தை கொண்ட படம், இது. கடந்த 24 படங்களில் ஜெயம் ரவியின் திரையுலக பயணத்தை பிரதிபலிக்கும் விதமாக ஜனரஞ்சகமான படமாக இது தயாராக இருக்கிறது.



ஜெயம் ரவியின் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர கதாபாத்திரங்களுக்கான நடிகர்-நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இமான் இசையமைக்கிறார். ஜெயம் ரவி படத்துக்கு இவர் இசையமைப்பது, இது நான்காவது முறை. ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய குமார் தயாரிக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி, நான் (லட்சுமன்) இயக்குகிறேன். படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது’’ என்றார் டைரக்டர் லட்சுமன்.
Tags:    

Similar News