சினிமா

தமிழ் படங்களில் நடிக்க டாப்சி ஆர்வம்

Published On 2019-02-27 09:43 IST   |   Update On 2019-02-27 09:43:00 IST
பாலிவுட் சினிமாவில் பிசியாகி இருக்கும் நடிகை டாப்சி, இந்தியில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் விடமாட்டேன் என்று கூறியிருக்கிறார். #Taapsee #GameOver
தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்த டாப்சி, தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் அவர் நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது தமிழில் `கேம் ஓவர்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் டாப்சி அளித்த பேட்டியில் கூறியதாவது,

“நான் கதாநாயகியாக அறிமுகமானது தென்னிந்திய மொழி படத்தில் தான். பெரிய ஹிட் படங்கள் அமையாமல் போனாலும் முதலில் கதாநாயகியாக அறிமுகம் கிடைத்தது இங்குதான். தென்னிந்தியாவில் என்னை அவர்கள் வீட்டு பெண் மாதிரி ஏற்றுக்கொண்டனர். இந்தியில் வாய்ப்புகள் வந்தன. அங்கு நல்ல படங்களில் நடித்தேன். பெயரும் புகழும் கிடைத்தது.



எவ்வளவு இந்தி படங்களில் நடித்தாலும் தமிழ், தெலுங்கு படங்களை மட்டும் விட மாட்டேன். எனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து வைத்ததே தென்னிந்திய திரையுலகம் தான். இந்தியில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நல்ல வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தேதி ஒதுக்கி கொடுத்து நடிக்க தயாராக இருக்கிறேன். இந்த புத்தாண்டில் இருந்து தென்னிந்திய மொழிகளில் வருடத்துக்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று உறுதி எடுத்து இருக்கிறேன்.”
 
இவ்வாறு டாப்சி கூறினார். #Taapsee #GameOver

Tags:    

Similar News