சினிமா

ஒரே மாதிரி படங்கள் எடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை - இயக்குநர் அமீர் பேச்சு

Published On 2019-02-19 06:59 GMT   |   Update On 2019-02-19 06:59 GMT
ஒரே மாதிரியான படங்களை எடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை என்று கூறிய இயக்குநர் அமீர், தற்போது சினிமாவின் மீது ஆர்வம் குறைந்துள்ளதாகவும், மண் சார்ந்து படங்களை எடுக்க முயற்சி செய்வதாக கூறினார். #Ameer
மதுரை அமெரிக்கன் கல்லூரி விஷுவல் கம்யூனிகே‌ஷன் துறை சார்பாக கலை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்த மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இதை இயக்குனர் அமீர் தொடங்கி வைத்தார்.

‘நான் சினிமாவை வெளியில் இருந்து பார்த்ததற்கும், சினிமா துறைக்கு வந்த பிறகு பார்ப்பதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. அதேபோல் தான் எல்லா துறைகளிலும் இது போன்ற அனுபவம் கிடைக்கும்.

நமக்கான அடையாளங்களையும், திறமைகளையும் அறிந்து நாம் தான் செயல்பட வேண்டும். ஒரு கட்டத்துக்கு மேல் நம்மை யாரும் இயக்க மாட்டார்கள், நாம் தான் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

தற்போது சினிமாவின் மீது ஆர்வம் குறைவாக உள்ளதாக எண்ணுகிறேன். எனவே, அதை போக்க மண் சார்ந்து மக்கள் சார்ந்து அதிக படங்களை எடுக்க முயற்சி செய்வேன்.



ஒரே மாதிரியான படங்களை எடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அப்படி நான் விரும்பி சற்று வேறு மாதிரி எடுக்க வேண்டும் என எடுத்த படம் தான் ராம். அது 2 சர்வதேச விருதுகளைப் பெற்றுத்தந்தது.

மதுரையில் அன்பும் பாசமும் அதிகளவு கொட்டிக்கிடக்கிறது.

கல்லூரி வாழ்க்கை என்பது ஒரு சுதந்திரமான வாழ்க்கை. அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும். அரசியல் கூட பேசி தெரிந்து கொள்ள வேண்டும். பிறரின் பிரச்னைகளை உணர வேண்டும்”.

இவ்வாறு அவர் பேசினார். #Ameer

Tags:    

Similar News