சினிமா

அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்

Published On 2019-02-14 16:34 IST   |   Update On 2019-02-14 16:34:00 IST
அனிஷாவின் வீடியோவை முதன் முதலாக பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன் என்று நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார். #Vishal #VishalAnisha
விஷால் தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். அனிஷாவிடம் காதலில் விழுந்தது பற்றி விஷால் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

’நான் ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அனிஷாவை முதன்முதலாக பார்த்தேன். அவரை பார்த்தவுடன் பிடித்துவிட்டது. எங்கள் நட்பு கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து திருமணம் வரை வந்துள்ளது. நான் தெரு நாய்களை பற்றி ஒரு படம் எடுக்க திட்டமிட்டிருந்தேன். தெரு நாய்கள் பற்றிய படம் குறித்து நான் அனிஷாவிடம் தெரிவித்து அவரின் கருத்தை கேட்டேன். அந்த படம் குறித்த விவாதங்களின் போது எங்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. நான் தான் காதலை முதலில் சொன்னேன்.



அனிஷாவை கடவுள் எனக்காக அனுப்பி வைத்துள்ளார். அனிஷா தேசிய அளவிலான கூடைப்பந்து வீராங்கனை. சமூக சேவையும் செய்து வருகிறார். அவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பது அவர் விருப்பம். அதில் நான் தலையிட மாட்டேன். அனிஷாவை பற்றிய ரகசியம் ஒன்றை சொல்கிறேன். அவர் புலிக்கு பயிற்சி அளிக்கும் திறமை கொண்டவர். அவர் எந்த புலியையும் எளிதில் தூங்க வைத்துவிடுவார். அப்படி ஒரு வீடியோவை முதன் முதலாக பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்’. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News