சினிமா

லண்டனை கவர்ந்த சுருதி ஹாசன் இசை

Published On 2019-01-27 14:39 IST   |   Update On 2019-01-27 14:39:00 IST
உலகின் மிக சிறந்த இசையமைப்பாளர்கள் நடத்திய லண்டன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிய சுருதிஹாசனின் இசை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. #ShrutiHaasan #ShrutiHaasanLiveinLondon
நடிகர் கமல்ஹாசன் மகள் சுருதிஹாசன். நடிகை, பாடகி, தயாரிப்பாளர், இசை அமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். தனது 6 வயதில் இசைப் பயணத்தை தொடங்கினார். தற்போது இசைப் பயணத்தின் மீது மீண்டும் கவனத்தை திருப்பி உள்ளார்.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையால் மக்களை கவர்ந்த இவர், தன் வாழ்நாள் கனவான லண்டனில் இருக்கும் டரவ்படூர் எனும் இடத்திலும் சமீபத்தில் இசைக்கச்சேரி நடத்தி பாடினார்.

இந்த வருடம் வெளிவர இருக்கும் அவரது சில பாடல்களை அவர் இந்நிகழ்ச்சியில் பாடினார்.



உலகின் மிக சிறந்த இசையமைப்பாளர்களான பாப் டைலான், எல்டான் ஜான், அட்லே, எட்ஸீரன் போன்றோர் இந்த இடத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர். இப்புகழ் பெற்ற அரங்கு 1954-ல் ஒரு காபி ஹவுஸ் ஆக தொடங்கப்பட்டது.

‘தி நெட்’ என்ற பெயரில் லண்டனில் உள்ள இடத்தில் கடந்த வருடம் செப்டம்பரில் நடந்த ஸ்ருதி ஹாசனின் இசை நிகழ்ச்சி சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

நியூயார்க்கில் உள்ள மேடி‌ஷன் அவென்யூவில் கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி நடந்த தி இந்தியன்டே பாரடே எனும் உலகின் மிகப்பெரிய சுதந்திர தின கூட்டத்தில் இவர் முழங்கிய வந்தே மாதரம் என்ற முழக்கம் அனைவரின் பாராட்டை பெற்றது. சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி இருக்கும் இவரது இசை நிகழ்ச்சி வீடியோக்களை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். #ShrutiHaasan #ShrutiHaasanLiveinLondon

Tags:    

Similar News