சினிமா

பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் மோதல் - தியேட்டர் கிடைப்பதில் சிக்கல்

Published On 2018-12-18 09:46 IST   |   Update On 2018-12-18 09:46:00 IST
ரஜினியின் `பேட்ட' படமும், அஜித்தின் `விஸ்வாசம்' படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படங்களுக்கு தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #Petta #Viswasam
ரஜினிகாந்த் நடிப்பில் `பேட்ட' படமும், அஜித் நடிப்பில் `விஸ்வாசம்' படமும் பொங்கல் விடுமுறைக்கு வெளியாகிறது. இரண்டுமே பெரிய கதாநாயகர்களின் படங்கள் என்பதால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கல் வெளியீடு என்பதை சில மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டனர். ஆனால் தியேட்டர் உரிமையாளர்களைப் பொறுத்த வரை ரஜினியின் பேட்ட படத்திற்கே முக்கியத்துவம் கொடுக்க விரும்புவதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா என நட்சத்திரப் பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது தான் அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி பேட்ட, விஸ்வாசம் உள்ளிட்ட 22 படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே எந்தெந்த படங்கள் பொங்கலுக்கு ரிலீசாகும் என்பது ஜனவரி முதல் வாரத்தில் தெரிந்துவிடும்.



இந்த வாரத்தில், 20-ந் தேதி விஜய் சேதுபதியின் சீதக்காதி, 21-ந் தேதி ஜெயம் ரவியின் அடங்க மறு, தனுசின் மாரி-2, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜீரோ, கேஜிஎப், அந்தரிக்‌ஷம், படி படி லெச்சே மனசு ஆகிய 9 படங்கள் திரைக்கு வருகின்றன. தியேட்டர்கள் பிடிப்பதில் இந்த படங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. #Petta #Viswasam

Tags:    

Similar News