சினிமா
உக்ரமாக களமிறங்கும் பிக்பாஸ் ஷாரிக்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஷாரிக், தற்போது புதிய படம் மூலம் கதாநாயகனாக களமிறங்க இருக்கிறார். #Shariq #Uggram
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷாரிக். இவர் தற்போது கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இந்த புதிய படத்தை ‘அட்டு’ பட இயக்குனர் ரத்தின் லிங்கா இயக்க இருக்கிறார்.
இப்படத்திற்கு ‘உக்ரம்’ என தலைப்பு வைக்கப்பட்டு மிகப் பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாக உள்ளது. இப்படத்தில் ஷாரிக்கிற்கு ஜோடியாக மிஸ் குளோபல் பட்டம் பெற்ற மாடல் அழகி அர்ச்சனா ரவி நடிக்கிறார். வில்லனாக மலேசிய சிவா அறிமுகமாகிறார்.
சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
துரை கே.சி. வெங்கட், ஒளிப்பதிவு செய்ய இருக்கும் இப்படத்திற்கு பூ பூ சசி இசையமைக்க இருக்கிறார். ரத்தின் லிங்கா, ராஜேஷ், ரவிகாந்த் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.