சினிமா

சீன மொழி பேசும் சுசீந்திரனின் கென்னடி கிளப்

Published On 2018-11-21 14:17 GMT   |   Update On 2018-11-21 14:17 GMT
சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கென்னடி கிளப்’, சீன மொழி பேச இருக்கிறது. #KennadyClub #Suseenthiran #Sasikumar
'டங்கல்' மற்றும் 'பாகுபலி' போன்ற இந்திய படங்களுக்கு சீன சந்தையில் மிகுந்த வரவேற்பு இருந்தது. அதேபோன்று தமிழ் திரைப்படத்துறைக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. சுசீந்திரன் இயக்கித்தில் வெளியாகவுள்ள படம் சீன மொழியில் டப்பிங் செய்யப்படுகிறது. இப்படத்தின் டப்பிங் உரிமம் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு, தடைகளை முறியடிப்பது, சாதனைகள் புரிவது, போன்ற படங்கள் அனைவரையும் ஈர்க்கும். அப்படி ஈர்க்கப்பட்டு தான் சீனாவில் இவ்வளவு பெரியத் தொகைக்கு விற்பனையாகியுள்ளது. இப்படம் நிஜ வாழ்க்கையில் பெண்களுக்கான கபடி போட்டியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மூத்த இயக்குநர் பாரதிராஜா மற்றும் சசிகுமார் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பாரதிராஜா- சசிகுமார்- சுசீந்திரன் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது சர்வதேச சந்தையிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தைக் கொண்டு உருவாகியுள்ளது 'கென்னடி கிளப்'. சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், 'புதுவரவு' மீனாக்ஷி, காயத்ரி, நீது, சௌம்யா, ஸ்ம்ரிதி, சௌந்தர்யா மற்றும் பலர் நடிக்கின்றனர். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை டி.இமான் இசையமைக்கிறார். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படம் 2019-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று உலகம் முழுவதும் வெளியாகும்.
Tags:    

Similar News