சினிமா

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - விவேக்

Published On 2018-11-21 10:37 GMT   |   Update On 2018-11-21 10:37 GMT
சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நடிகர் விவேக் ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறியுள்ளார். #Vivek
நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் சுற்றுச்சூழல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டியில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா முன்னிலை வகித்தார். இதில் நடிகர் விவேக் கலந்து கொண்டு மார்லிமந்து அருகே உல்லத்தி சாலையில் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே நடிகர் விவேக் பேசியதாவது -

நீலகிரி மாவட்டத்தின் சீதோஷ்ண நிலை பல்லுயிர் சூழலுக்கு ஏற்றவாறு அமைந்து உள்ளதால் யுனஸ்கோ நிறுவனம் சிறந்த உயிர் சூழல் மண்டலமாக அறிவித்து உள்ளது. இங்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு அனைவரும் முக்கியத்துவம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



ஊட்டி சேரிங் கிராஸ் பகுதியில் நடிகர் விவேக் ஹெல்மெட் அணிவது மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை நடிகர் விவேக் வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகராட்சி கமி‌ஷனர் நாகராஜ், தோட்டகலைத்துறை துணை இயக்குனர் சிவசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News