சினிமா

புதுப்பேட்டை 2 எப்போது? ரசிகரின் கேள்விக்கு செல்வராகவன் பதில்

Published On 2018-10-06 07:27 GMT   |   Update On 2018-10-06 07:27 GMT
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிய புதுப்பேட்டை படத்தின் இரண்டாவது பாகம் உருவாக்குவது பற்றிய ரசிகரின் கேள்விக்கு செல்வராகவன் பதில் அளித்துள்ளார். #Selvaraghavan #Pudhupettai2
தமிழ் சினிமாவில் தனது உன்னத படைப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். அவரது படங்களை எப்போது பார்த்தாலும் ரசிக்கும்படியாகவே இருக்கும். அந்த அளவுக்கு நேர்த்தியாக இயக்கியிருப்பார்.

அவர் தற்போது சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை இயக்கி வருகிறார். ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகுவது தான் தற்போதைய சினிமாவில் ட்ரெண்டாக இருக்கிறது. அந்த வகையில் அவரது இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களின் இரண்டாவது பாகங்கள் எப்போது உருவாகும் என்று ரசிகர்கள் அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

முன்னதாக ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை இந்த இரு படங்களின் இரண்டாம் பாகத்திற்கு தான் கதை யோசித்து வைத்திருப்பதாக செல்வராகவன் கூறியிருந்தார். எனவே இந்த இரு படங்களின் இரண்டாம் உருவாகும், செல்வராகவன் - தனுஷ் கூட்டணி மீண்டும் இணையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

இந்த நிலையில், நடிகர் சந்தீப் கிஷன், மீண்டும் புதுப்பேட்டை படத்தை பார்க்கிறேன். வருடங்கள் கடந்தாலும் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒருவித பூரிப்பு ஏற்படுகிறது. என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்திருந்த செல்வராகவனிடம் ரசிகர் ஒருவர் புதுப்பேட்டை இரண்டாம் பாகத்திற்காக காத்திருப்பதாக கூறியிருந்தார். அவருக்கு பதில் அளித்த செல்வா, நேரம் வரும் போது நிச்சயம் உருவாகும் என்று கூறியிருக்கிறார்.

Tags:    

Similar News