சினிமா

மீண்டும் கதையின் நாயகனாக களமிறங்கும் ராஜ்கிரண்

Published On 2018-09-07 21:15 IST   |   Update On 2018-09-07 21:15:00 IST
தனுஷ் இயக்கிய பா.பாண்டி படத்தை அடுத்து மீண்டும் கதையின் நாயகனாக ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ராஜ்கிரண் நடிக்க இருக்கிறார். #Rajkiran
முதலில் கதாநாயகன், முக்கிய கதாபாத்திரம், குணச்சித்திர வேடம், வில்லன் என பல அவதாரங்கள் எடுத்த ராஜ் கிரண், தனுஷ் இயக்கிய ‘பா.பாண்டி’ படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் கதையின் நாயகனாக நடிக்க இருக்கிறார். 

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தை டைரக்டு செய்தவர், ராம்பிரகாஷ் ராயப்பா. இவர், அந்த படத்தை அடுத்து, ‘போக்கிரி ராஜா’ படத்தை டைரக்டு செய்தார். தற்போது, ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. இதையடுத்து ராஜ்கிரண் முன்னணி கதாபாத்திரத்தில் வைத்து படம் இயக்குகிறார். 



ராஜ்கிரணுடன் டி.வி. புகழ் ரக்‌ஷன் நடிக்கிறார். மற்ற நடிகர்-நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது, நவீன தொழில்நுட்பத்தை விரிவாக அலசும் படமாக உருவாகிறது. கல்பத்தரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கிறார்.
Tags:    

Similar News