சினிமா

நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் - பா.விஜய்

Published On 2018-08-12 12:12 GMT   |   Update On 2018-08-12 12:12 GMT
நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் உருவாகி இருக்கிறது என்று பாடலாசிரியர் பா.விஜய், பட விழாவில் கூறியிருக்கிறார். #Aaruthra #PaVijay
பாடலாசிரியர் பா.விஜய் எழுதி இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம் ‘ஆருத்ரா’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ், பேராசிரியர் ஞான சம்பந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய பா.விஜய், “இந்தப் படத்திற்கு சென்சார் வாங்குவதற்குள் திகில் அனுபவமாகி விட்டது. முதலில் படத்தைப் பார்த்தவர்கள் இந்தப் படத்திற்கு என்ன சான்றிதழ் தருவதென்றே தெரியவில்லை எனக் கூறி ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி விட்டார்கள். அங்கிருந்த அதிகாரிகளும் படத்தைப் பார்த்து விட்டு, சுமார் ஒரு மணி நேரம் விவாதித்தார்கள். 

பின்னர் சில வன்முறைக் காட்சிகளை நீக்கச் சொல்லிவிட்டு, யு/ஏ சான்றிதழ் வழங்கினார்கள். ஆனால் படத்தை வெகுவாக அவர்கள் பாராட்டினார்கள். அவசியமான பதிவு எனக் கூறினார்கள். நிர்பயா பலாத்கார சம்பவத்தின் தாக்கத்தினாலேயே இப்படத்தை நான் உருவாக்கினேன். தற்போது நிகழ்ந்து வரும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு சவுக்கடியாக இப்படம் இருக்கும். 



ஒரு குழந்தையை பாதுகாப்பது அவரது பெற்றோர்களின் பொறுப்பு. ஆனால் நம் தமிழகத்தில் பெற்றோர்கள், குழந்தைகளைப் பார்க்காமல் செல்போனை பார்த்தபடியே இருக்கிறார்கள். தமிழகமே தலை குனிந்தபடி வாட்ஸ் அப் பார்த்தபடி உள்ளது. இவற்றிற்கெல்லாம் தீர்வு சொல்லும் வகையில், பெற்றோர்கள் குழந்தைகளை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் படமாக ஆருத்ரா இருக்கும்“ என தெரிவித்தார்.
Tags:    

Similar News