சினிமா

ஜோதிகா பிறந்தநாளில் காற்றின் மொழி ரிலீஸ்

Published On 2018-07-30 07:05 GMT   |   Update On 2018-07-30 07:05 GMT
ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகும் `காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஜோதிகா அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டாராம். #KaatrinMozhi #Jyothika
`தும்ஹரி சூளு' படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கிறது `காற்றின் மொழி'. ஜோதிகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை ராதா மோகன் இயக்க்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்திருந்தது. 

இந்த நிலையில், படத்தை ஜோதிகாவின் பிறந்தநாளான அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்ய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழு அனுமதி அளித்துள்ளது.

இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடித்து வருகிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 



போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார். விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. #KaatrinMozhi #Jyothika 

Tags:    

Similar News