சினிமா

படம் வெளியாகும் முன்பே கதாநாயகியை கரம் பிடித்த அறிமுக இயக்குனர்

Published On 2018-06-15 19:27 IST   |   Update On 2018-06-15 19:27:00 IST
தான் இயக்கி வரும் முதல் படம் வெளியாகும் முன்பே அந்த படத்தின் கதாநாயகியை திருமணம் செய்திருக்கிறார் இயக்குனர். #PeiEllamPavam
ஒரு படத்தில் நடிக்கும் கதாநாயகியை அந்த படத்தின் இயக்குனர் காதலித்து திருமணம் செய்துகொள்வது புதிது அல்ல. ஆனால் முதல் படம் வெளியாகும் முன்பே தனது கதாநாயகியை மணந்து இருக்கிறார் ‘பேய் எல்லாம் பாவம்’ படத்தின் இயக்குனர் தீபக் நாராயணன்.

இவர் மலையாளத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்துவிட்டு தமிழில் மாறுபட்ட வித்தியாசமான ஒரு பேய் படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பவர் டோனா சங்கர். 

இதுகுறித்து தீபக்கிடம் கேட்டபோது ‘காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்த திருமணம் இது. டோனா என்னுடைய படம் மட்டும் அல்லாமல் டிவி தொடரிலும் நடித்துவருகிறார். அவருக்கு முக்கியத்துவம் தரும் நல்ல கதைகளில் தொடர்ந்து நடிப்பார்’ என்றார்.
Tags:    

Similar News