சினிமா

பாலியல் தொழில் செய்ததாக பிரபல சீரியல் நடிகை சங்கீதா கைது

Published On 2018-06-02 15:49 IST   |   Update On 2018-06-02 15:49:00 IST
தொலைக்காட்சி தொடர்களின் மூலம் பிரபலமான சீரியல் நடிகை சங்கீதா பாலியல் தொழில் செய்ததாக சென்னை அருகே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொழில் செய்ததாக, தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான சின்னத்திரை நடிகை சங்கீதாவை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பாலியல் தொல்லை நடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதில் சின்னத்திரை நடிகை சங்கீதா உட்பட பாலியல் தொழில் செய்ததாக மேலும் சிலரை போலீசார் கைது செய்தனர். 

நடிகை சங்கீதா, இளம் நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் 3 இளம் நடிகையும் கைது செய்யப்பட்டுள்ளாராம். கைது செய்யப்பட்டுள்ள சங்கீதா பிரபல வாணி ராணி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News