சினிமா

கேரள முதல்வராகும் மம்முட்டி

Published On 2018-05-02 14:06 IST   |   Update On 2018-05-02 14:06:00 IST
மலையாள சினிமாவில் முன்னணி நாயகராக வலம் வரும் மம்முட்டி அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் கேரள முதல்வராக நடிக்க இருக்கிறார். #Mammootty
மலையாள முன்னணி ஹீரோ மம்முட்டி வித்தியாசமான படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அடுத்து, ஒரு அரசியல் திரில்லர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சந்தோஷ் விஸ்வநாத் இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘சிரகொண்டிச கினவுகள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த கதையை பாபி சஞ்சை எழுதியுள்ளார். இந்த படத்தில் மம்முட்டி முதல் முறையாக கேரள முதல்-மந்திரியாக நடிக்கிறார். ஸ்ரீனிவாசன் முக்கிய அரசியல்வாதியாக நடிக்கிறார்.

படம் குறித்து இயக்குனர் சந்தோஷ் விஸ்வநாத், “இந்த படத்தில் மம்முட்டி தனிப்பட்ட அரசியல் தலைவராக நடிக்கிறார். இது கேரள மாநில அரசியல் பற்றிய படம் அல்ல” என்று கூறினார்.



மம்முட்டி ஏற்கனவே 1995-ல் வெளியான ‘மக்கள் ஆட்சி’ படத்தில் தமிழக முதல்-மந்திரியாக நடித்தார். தெலுங்கில் தற்போது தயாராகி வரும் ‘யாத்ரா’ படத்தில் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து, கேரள முதல்-மந்திரியாக நடிக்கிறார். இதன் மூலம் 3 தென் மாநில முதல்-மந்திரிகள் வேடத்திலும் நடிக்கும் வாய்ப்பை மம்முட்டி பெற்றுள்ளார். #Mammootty #ChirakondijaKinavukal

Similar News