சினிமா

விஜய் 62 படத்தின் அடுத்த அப்டேட்

Published On 2017-11-02 02:48 GMT   |   Update On 2017-11-02 02:49 GMT
`மெர்சல்' படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் இளம் இசையமைப்பாளர் ஒருவர் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி சர்ச்சைகளுக்கு இடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் `மெர்சல்'.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க இருக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ‘அங்கமாலி டைரீஸ்’, ‘சோலோ’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கிரீஸ் கங்காதரன் விஜய் 62-ல் இணையவிருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.

இந்நிலையில் `விக்ரம் வேதா' படத்திற்கு இசையமைத்த சாம்.சி.எஸ் தளபதி 62 படத்திற்கு இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சாம்.சி.எஸ் தற்போது வரலட்சுமி சரத்குமாரின் `சக்தி' படத்திலும், கார்த்திக் - கவுதம் கார்த்திக் இணையும் `மிஸ்டர்.சந்திரமௌலி' படத்திற்கும் இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.



அதுமட்டுமின்றி தல 58 படத்திலும் சாம்.சி.எஸை ஒப்பந்தம் செய்ய படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் திரைக்கதையில் ஏ.ஆர்.முருகதாஸ் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News