சினிமா

ஜோதிகா வழியில் அருள்நிதி மேற்கொள்ளும் புதிய முயற்சி

Published On 2017-02-21 07:28 IST   |   Update On 2017-02-21 07:28:00 IST
ராதாமோகன் இயக்கத்தில் காது கேட்காத, வாய் பேச முடியாதவராக நடிக்கும் அருள்நிதி நடிக்க உள்ளார். இப்படம் குறித்து சில முக்கிய தகவல்களை கீழே பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களுள் ஒருவர் அருள்நிதி தமிழரசன். அவர் நடிப்பில்  வெளிவந்த `மவுன குரு', `டிமான்டி காலனி', `நாலு போலீசும் நல்ல இருந்த ஊரும்', `ஆறாது சினம்' உள்ளிட்ட படங்கள் தமிழ்  சினிமாவில் அருள்நிதிக்கு ஒரு முக்கிய இடத்தை பெற்றுத்தந்தது.

இந்நிலையில் `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் ஒப்பந்தமாகியுள்ள அருள்நிதி, ராதாமோகன் இயக்கத்தில் மற்றொரு  படத்திலும் நடிக்க உள்ளதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ராதா மோகன் இயக்கும் அந்த படத்திற்கு `பிருந்தாவனம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ராதாமோகன் `மொழி',  `பயணம்' உள்ளிட்ட இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தது.

முன்னதாக ராதாமோகன் இயக்கத்தில் வெளியான `மொழி' படத்தில் ஜோதிகா காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணாக  நடித்திருந்த நிலையில், `பிருந்தாவனம்' படத்தில் அருள்நிதி காது கேட்காத, வாய் பேச முடியாத நபராக நடிக்க உள்ளதாக  அவரே குறிப்பிட்டுள்ளார். அருள்நிதியின் புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Similar News