சினிமா

ரஜினியுடன் சந்திப்பு நடத்தவில்லை: ரசிகர் மன்ற நிர்வாகிகள் அறிவிப்பு

Published On 2017-02-02 19:39 IST   |   Update On 2017-02-02 19:40:00 IST
ரஜினியுடன் சந்திப்பு நடத்தவில்லை என்று ரசிகர் மன்ற நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
ரஜினி தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து நலம் விசாரிப்பது, ஆலோசிப்பது வழக்கம். ரஜினிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாலும், தொடர் படப்பிடிப்பில் இருந்ததாலும் இந்த சந்திப்பு கடந்த சில வருடங்களாக இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ரஜினி தனது மாநில மற்றும் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ரஜினி மன்ற நிர்வாகிகளுடன் உரையாடியபடி ஒரு புகைப்படமும் வெளிவந்தது. இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விசாரித்ததில், அப்படி ஒரு சந்திப்பு நடைபெறவில்லை என்று கூறியுள்ளனர்.

ரஜினி, ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்துள்ளதாக வெளிவந்த புகைப்படமும், பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது என்றும் கூறுகின்றனர். எனவே, நேற்று முன்தினம் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்ததாக வெளிவந்த செய்தி வெறும் வதந்தியே என்றும் கூறுகின்றனர்.

Similar News